Saturday, March 23, 2013

கூட்டுப்பறவைகள் நாங்கள்

கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் தோழியின் நீண்ட நாள் கோரிக்கைக்கிணங்க இப்பதிவு!(ஒரு முக்கியமான நாளில்.. தெரியலைனா முழுசா படிங்க)
"இரைதேடும் பறவைகள்
 மீண்டும் கூடுவோம்
 கூண்டும்ப்ப்றவைகள் அல்ல
 கூட்டுப்பறவைகள் நாங்கள்" பிரிவு உபச்சார விழாவில் நான் சொன்ன கவிதை. கூடினோமா நாம்? சில புகைப்படங்களோடு திரும்பிப்பாரக்கலாம்


 30 பேர் கொண்ட மாணவ அணியில் இன்று பாதிக்கும் மேல் திருமணவாழ்க்கையில் ஐக்கியம் :).
 சுதா,ராஜி,ராஜகுரு,சுவர்ணலதா,மகேஸ்வரி,மாரீஸ்வரி,பிரதீபா,பிரபா,யசோதா,
நித்யா,சகிலா,காயத்ரி,விக்னகலா,கிருஷ்னபிரபா,கலைச்செல்வி என நீலும் வரிசையில் சமீபத்தில் இணைந்தது ரோகினி. விரைவில் இணையபோவது கலாராணி(15/ஜீன்/13). விரைவில் அனைவரும் இதில் இணைய வாழ்த்துக்கள்.

இதில் ராஜி,சுவர்ணலதா,சகிலா,பிரதீபா,பிரபா,யசோதா அனைவருக்கும் மழலைச்செல்வங்களும் உண்டு! மகிழ்ச்சி :)

இப்போ நம்ம வருத்தமில்லா கணினி அணி.. இன்னமும் அய்யாத்தல வழியில் வருத்தமில்லாமல்! விச்சு,செந்தில்,சந்திரன்,குமார்,கருப்பு,கோவிந்த்,வரது சென்னையில்,நான்,கனி,கண்ணன் பெங்களூரில் ஒதுங்க, விஜய் கோவையிலும்,கனகு,ஹனிப் மதுரையிலும் உள்ளனர்.மூவேந்திரன்,மணிமுத்து என்ன செய்றாங்கனு தெரியல. மைக்கேல் நம்முடன் இல்லை :(. 
















மேல உள்ள படம் கனகு ஊர்ல ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுல மச்சான் ஆடினத பார்க்க போனப்ப பக்கத்துல இருந்த மல்லிகை தோட்டத்துல எடுத்தது. என் மடியில் கிடக்கும் வரதுக்கும் இப்போ முகநூலில் இருக்கும் வரதுக்கும் 6 வித்தியாசம் முடிஞ்சா கண்டுபிடிங்க! இந்த காட்சிய புகைப்படமா கைது பண்ணிவச்ச எங்களால அந்த சந்தொஷத்த அப்படியே தக்க வைக்க முடியல :(. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? கிடைக்குமா அந்த நாள்?.


இத பாருங்க... யாராவது சுற்றுலானு காலைல போய்ட்டு மதியம் திரும்பியிருக்காங்களா?. நாங்க வந்திருக்கோமே :) குற்றாலம் .. முதல் வருடத்தில் நடந்த ஒரு விழாவில் பாதி காசை அமுக்கி போனது! குற்றலாம் போய் சாப்பிட காசு இல்ல.. திரும்பி வந்தாச்சு :) வாழ்க்கைல காசு வந்து என்ன பன்ன.. இந்த போட்டோ எடுக்குறப்ப யார் பாக்கெட்லயும் நயா பைசா கிடையாது.. ஆனா முகத்துல சந்தோஷம்? காசு மட்டும் வாழ்க்கை இல்லனு இன்னமும் இந்த போட்டோ உணர்த்தும்!


ஆங்... இது கல்லூரி வாழ்க்கையின் சந்தோஷம் உச்சகட்டத்துல இருந்தப்ப எடுத்துகிட்ட புகைப்படம். இந்த சுற்றுலாக்கு நம்மள கூட்டிட்டுப்போன தனபாலன் சார் நம்மளோட இப்ப இல்ல.. ஜி.எஸ் இப்போ கல்லூரில இல்ல. போன தைப்பொங்களோட எல்லோரும் மதுரைல பார்க்கனும்னு 3 மாசமா பேசி கடைசில மதுரைக்கு சந்திச்சுக்கிட்டது என்னோட சேர்த்து நாலு பேரு! ஆனா அப்ப இருந்த குமார்தான் இப்பவும் :) மனுஷன்யா அவன் !

இந்தப்படம் எடுத்து சரியா இன்னையோட சேர்த்து ஆறு வருசம் ஆச்சு!


நாளைக்கு பார்க்கலாம் மச்சினு சாமி கடைல விடைபெற்றது... கடைசி பஸ் வரும்வர பாலத்துல உட்கார்ந்து ஸைட் அடிச்சது.. மொத்தமா வகுப்புல இருந்து வெளிய போய் மானக்கேடா திட்டு வாங்கினது.. கிடைக்குமா?

Monday, October 10, 2011

கண்ணீர் அஞ்சலி!




நம்முடன் படித்த நண்பன் மைக்கேல்ராஜ் இன்று அகால மரணமடந்தான்.
நண்பனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

Saturday, September 3, 2011

கண்ணீர் அஞ்சலி!

நம் துறைத்தலைவர், திரு.தனபாலன் அவர்கள் 1/09/2011 மாலை 4.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்!

Monday, November 1, 2010

IT TECH MEET

நீண்ட நாட்களுக்கு பிந்தைய பதிவு இது..
     நாம் முதலாம் ஆண்டு படிக்கும் சமயத்தில் SENIOR-களோடு வெளிக்கல்லூரிகளில் நடைபெறும் IT TECH MEET போட்டிகளுக்கு செல்வதுண்டு.மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே திண்டுக்கல்லில் நடைபெற்ற (கல்லூரி பெயர் ஞாபகம் இல்லை!) முதல் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு நம் வகுப்பில் எனக்கும்,குமாருக்கும் கிடைத்தது!.கிளம்புவதற்க்கு முந்தைய நாள் நம் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி(ஒரு நாள்  மட்டுமே!),அதிலும் பெரும்பாண்மையான நேரம் விளையாட்டு.அதிகாலையில் ஒரு சிறிய வேனில் பயணம்.காலை உணவு கிடையாது! அனைத்தும்  A.R ராஜேஷ்  Sir-இன் செலவு!போட்டியில் பங்கேற்க்க நுழைவுக்கட்டணம் செலுத்தினால் போதும் மதிய சாப்பாடு உண்டு!ஆதலால் காலையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளே..அதுவும் புதிதாய் வந்த எனக்கும் குமாருக்கும் மட்டுமே!மதியத்திற்க்கு மேலேதான் ஆட்டம் சூடு பிடிக்கும்.

முடிவுகள் அறிவிக்கப்படும்.அண்ணன்கள் அய்யாத்துரை,செந்தில்,ரமேஷ்,சந்தொஷ் ஆளுக்கொரு பரிசாக அள்ளுவார்கள்.இறுதியில் நம் கல்லூரி முதல் பரிசு(OVER ALL CHAMPIONSHIP) வெல்லும்.செல்லும் பொது அமைதியாக  சென்ற பயணம் மிகுந்த குதுகலாகத்தோடு திரும்பும்.மறுநாள் காலையில் அனைவர் முன்னிலையிலும் பரிசு,அனைத்து பேராசிரியர்களிடமும் பாராட்டு என அமர்க்களப்படும் ஒரு வாரத்திற்க்கு..இதுவே ஒரு நல்ல தூண்டுதலாக அமைந்தது!இரண்டாம் ஆண்டில்  சந்தொஷ் அண்ணன் தலைமை..மனிதர் தனி ஆளாக நின்று விலையாடுவார்! அதற்க்கு பலனாக        SFR கல்லூரியில்  முதல் பரிசு!மூன்றாம் ஆண்டில் சொல்லிக்கொள்ளும் விதமாக ஏதும் இல்லை..அந்த ஆண்டில் விருதுநகர் V.H.N.S.N  கல்லூரியில் எனக்கு கிடைத்த ஒரே ஒரு இரண்டாம் பரிசே மிச்சம்...
இதற்க்கு பல காரணங்கள் இருந்தன..திறமையான பலர் இருந்தும் கூட்டமைப்பு,சரியான பயிர்ச்சி,வழி நடத்தல் இல்லாமை.....




நீண்ட காலத்திற்க்குப்பின் கடந்த மாதத்தில் அந்த சாதனைகளை மீண்டும்  படத்துள்ளது   தற்போதைய படை.. அழகாகவும்,ஆச்சர்யமாகவும் படையின் தலைமை நம் தோழன் (மற்றுமொறு) செந்தில் கடந்த வாரத்தில் அவனை நான் தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல் இது.கடந்த மாதத்தில் மட்டுமே இரண்டு கல்லூரிகளில் நடைபெற்றபோட்டிகளில் நம் கல்லூரி தான் முதல் பரிசு(OVER ALL CHAMPIONSHIP ) வென்றுள்ளது..விசாரித்ததில் இதற்க்கு பக்க துனையாக நம் K.K.மேடம்.சமீபத்தில் தந்தையை இழந்திருந்த நண்பன் அதிலிருந்து மீண்டு வரவும் இந்த போட்டிகள் உதவியிருக்கிறது.என் அனுபவத்தில் கண்டிப்பாக நம் கல்லூரி கவனம் கொள்ளவேண்டியவை இவை.
1) வெற்றி பெரும் சமயங்களில் பாராட்டுவதோடு நின்றுவிடாமல்,தொடர்ந்து பயிற்ச்சியும்,ஊக்கமும் தர வேண்டும் நம் கல்லூரி.

2) ஆறு வருடங்களுக்கு முன்னதாகவே மற்ற கல்லூரி அணிகள் இருபாலராக வந்து பங்கு பெறுவார்கள்.எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களை அதிகமாக கொண்ட நம் கல்லூரி,அன்று முதல் இன்று வரை ஆண்கள் மட்டுமே பங்கேற்க்க அனுப்புகிறது,திறமையான பெண்கள் இருந்தும்.




நண்பன் செந்திலுக்கு வாழ்த்துக்கள் :)...பின்னூட்டத்தில் நீங்களும் வாழ்த்து தெரிவியுங்கள்!

Saturday, June 27, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

2009 ஜூன் 28....

சரியாக நாம் கல்லுரியில் ஒன்றாக இனைந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன..

இந்த பிறந்தநாளுக்கு அனைவரும் இனையமுடியாவிட்டாலும்,அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்துக்களை தெரிவிப்போம்,கூடியவிரைவில் இனைவொம்!


வாழ்க்கையெனும்

பூந்தோட்டத்தில் மொட்டுகளாய்

மலர்ந்து பூக்களெனும்

பருவமெடுத்து எதிர்காலமெனும்

பயணங்களில்

SRNM எனும் நாரெடுத்து

நாற்பத்தாறு மொட்டுக்களை

கனிணீயெனும்

கலையறிவியலுக்கு மாலையாய்

கோர்த்த அந்த இனிய நாளே

வருக! வருக! வருக!


இவன் மொட்டுக்களில்ஒருவன்...


கவிதைகளுக்கு பஞ்சமில்லா நம் கூட்டில்,கவிதையை பொறித்தது,நமது INFOSYS விஸ்வநாதன்!அனைவருக்கும் வாழ்த்துக்கள் எந்தன் சார்பிலும்!

Tuesday, April 7, 2009

இனிய நினைவுகள்!

கடந்த மார்ச் 24ம் தேதியொடு சரியக இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன! ஆனால் இன்று நினைத்தாலும் அவை இனிய நினைவுகளே!அவற்றில் சில...




* Tour Plan பண்ண உடனே முதல்ல Response பண்ணது நம்ம Class Girls!(30ல 31 Group இருக்கிற நம்ம பிள்ளைங்ளா?)




*பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு,21ம் தேதி தான் Tour போக அனுமதி கிடச்சது!பல பேர் பல ஊர சிபாரிசு செஞ்சாலும் கடைசியா உருதியானது,கன்னியாகுமரி-திருவந்தபுரம்!





* Omni Busல ஆரம்பிச்சு கடைசில ஆட்குறைப்பு காரணமா Omni Vanஆக மாறியது சுற்றுலா வாகனம்!(College Busல போகாத வரை சந்தோஷம்!)





* "அழகென்ற சொல்லுக்கு முருகா...."னு Vanல பட்டுப் பாட...23ம் தேதி நள்ளிரவு 1மணிக்கு, கல்லூரி வினாயகர் கோவிலுக்கு தேங்காய் உடச்சு,கேட் Watchmanட வம்பிழுத்து,முக்குரோட்ல வேட்டு போட்டு ஆரம்பமாச்சு நம்ம Tour!(13 Girls+9 Boys+2Staffs)





* அதிகாலை 5 மணிக்கு கன்னியாகுமரிக்கு கொஞ்சம் முன்னாடி வேனை நிப்பாட்டி டீ! 5.30க்கு கன்னியாகுமரி! 6.10க்கு Sunrise!சுனாமி Emblem முன்னாடி எல்லாரும் சேர்ந்து Group Photo!





** பொண்ணுங்களோட முயற்சியால் திருட்பறப்பு Falls போக முடிவானது! உண்மையாவே செம ஆட்டம்!
காலையில சாப்பாடும் அங்க தான்! யாருமே எதிர் பார்க்காத விதமா எலியுமா பூனையுமா இருந்த நம்ம Class girls and Boys ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டது! பாதி பசங்களுக்கு சாப்பாடு Sponsor பிள்ளைங்கதான்!


* அப்புரம் கிளம்பினது திருவனந்தபுரத்துக்கு! 12.30க்கு Valley Beach.மதியம் சாப்பாடு நம்ம H.O.D சார் Sponsor! கூப்பிட்டும் பொண்ணுங்க சாப்பிட வரல! அப்புரம் 3 மணி போல Boat Riding!

* நல்லா அட்டம் போட்டுட்டு 4 மணிக்கு Covalam Beech .5 மணிக்கு வண்டிய எடுக்கனும்னு நம்ம H.O.D சார் சொல்ல பசங்க வந்தது 6 மணிக்கு! கடைசியா வந்து பாட்டு வாங்கினது நம்ம விஜயும்,கருப்பும்! இப்ப பாத்துகிட்டாலும் பசங்க இத சொல்லி கிண்டல் அடிப்போம்!

* அப்புரம் அமைதியா கிளம்பி,நாகர்கோவில் 'கொளரி சங்கர்' மெஸ்ல சாப்பிட்டு,H.O.D சார் கோவில்பட்டில இறங்கியதும் திரும்பவும் College வர ஆட்டம்!

கைல காசு கிடையாது,H.O.D சார்ட திட்டு,ஆனா எதபத்தியும் கவலைபடாம..உண்மையிலயே சேம Enjoyment!உண்மையில அனைவரும் பழகிக்க நல்ல வாய்ப்பா இருந்தது நம்ம Tour!

கல்லூரி முடிஞ்சு திசைக்கு ஒரு ஆளா போயாச்சு! இன்னைக்கு நினைச்சு பாத்தாலும் இனிக்கும் நினைவுகள் இது!எல்லாரும் Settle ஆன பிறகு திரும்பவும் இதே மாதிரி Tour போகனும்! நீங்க நினைச்சு நான் எழுதாம எதாவது விட்டு போயிருந்தா கண்டிப்பா உங்க Comments
பகுதில சொல்லுங்க!


Wednesday, November 26, 2008

வாழ்த்து சொல்லுவொம்......

முதல்ல நல்லபடியா 3rd செம் முடிச்சுட்டு,சொந்த ஊர்ல ஊர் சுத்துர அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!...எங்க சுத்தினாலும்,சொந்த ஊர்ல ராஜாவா ஊர்சுத்துறது தனி சுகமே!

எதிர் வரும் வாரத்தில் நம் SCG குடும்பத்தோட சுப நிகழ்ச்சிகள் வருது...அதுக்கான வாழ்த்துப்பகுதியா இந்த பதிவ நாம உபயோகிக்கலாம்...உங்களோட comments பகுதில நீங்களும் வாழ்த்துங்க!

*) 5வது திருமண மலர்கள் பெரும் வகுப்பறைத்தோழி பிரபாவதிக்கு!
(டிசம்பர் 4,பொள்ளச்சியில்!)
*) அன்புத்தோழி ரோகிணி இல்லத்திருமண விழா....
(கல்யாணம் ரோகினி அக்காக்கு,ரோகினிக்கு இல்ல)
மணமக்கள்: B.சித்ரா weds R. செந்தில்
இடம்: கோவில்பட்டி, நாள்:30-11-2008.(invitation attached)
*)அன்புத்தோழன் ஹனீப் இல்லத்திருமண விழா....
(மாப்ல ஹனீபொட மதினி கல்யாணம்)
மணமக்கள்:J.மும்தாஜ் weds S. சிக்கிந்தர் பாட்ஷா
இடம்: சாத்தூர், நாள்:30-11-2008(invitation attached)



*)டிசம்பர் 24,அன்று Cognizant Technologies ல் வேலையில் இனைந்த நம் Super Senior Ayyadurai அவர்களுக்கும் வாழ்த்துக்கள்(Completed M.C.A in Anna university and placed in camphus!)
உடல் நலக்குறைவால என்னால கல்யாணத்துல கலந்துக்க முடியாது...ஆனா நம்ம பசங்க கலந்துட்டு பட்டய கிளப்புவாங்க... உரிமையா எல்லோறையும் கூப்பிட்ட ரோகினி,ஹனிப்க்கு பாராட்டுக்கள்!என்னால Organize பன்ன முடியலனு உண்மையாவே வருந்துறேன்...

கடைசிப்பதிவோட கடைசி comment பாருங்க!,நம்ம Super Senior Ramesh அண்ணனோடது...இந்த தளத்த படிப்புக்கும் உபயோகிக்கிலாமேனு சொல்லிருந்தாங்க...சீக்கிரமே அதற்க்காண நடவடிக்கையை எடுப்போம்!ஏன்னா அடுத்த வருஷம் நாமளும் Project பன்னனும்,வேலைக்கும் போகனும்,இதுக்கு நம்ம Seniorஸொட contact இருந்தா நல்ல இருக்கும்..

சரி இப்போதைக்கு coolஆ leavஐ enjoy பன்னுங்க,ஊர் சுத்துங்க,Function attend பன்னுங்க.....