Wednesday, November 26, 2008

வாழ்த்து சொல்லுவொம்......

முதல்ல நல்லபடியா 3rd செம் முடிச்சுட்டு,சொந்த ஊர்ல ஊர் சுத்துர அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!...எங்க சுத்தினாலும்,சொந்த ஊர்ல ராஜாவா ஊர்சுத்துறது தனி சுகமே!

எதிர் வரும் வாரத்தில் நம் SCG குடும்பத்தோட சுப நிகழ்ச்சிகள் வருது...அதுக்கான வாழ்த்துப்பகுதியா இந்த பதிவ நாம உபயோகிக்கலாம்...உங்களோட comments பகுதில நீங்களும் வாழ்த்துங்க!

*) 5வது திருமண மலர்கள் பெரும் வகுப்பறைத்தோழி பிரபாவதிக்கு!
(டிசம்பர் 4,பொள்ளச்சியில்!)
*) அன்புத்தோழி ரோகிணி இல்லத்திருமண விழா....
(கல்யாணம் ரோகினி அக்காக்கு,ரோகினிக்கு இல்ல)
மணமக்கள்: B.சித்ரா weds R. செந்தில்
இடம்: கோவில்பட்டி, நாள்:30-11-2008.(invitation attached)
*)அன்புத்தோழன் ஹனீப் இல்லத்திருமண விழா....
(மாப்ல ஹனீபொட மதினி கல்யாணம்)
மணமக்கள்:J.மும்தாஜ் weds S. சிக்கிந்தர் பாட்ஷா
இடம்: சாத்தூர், நாள்:30-11-2008(invitation attached)



*)டிசம்பர் 24,அன்று Cognizant Technologies ல் வேலையில் இனைந்த நம் Super Senior Ayyadurai அவர்களுக்கும் வாழ்த்துக்கள்(Completed M.C.A in Anna university and placed in camphus!)
உடல் நலக்குறைவால என்னால கல்யாணத்துல கலந்துக்க முடியாது...ஆனா நம்ம பசங்க கலந்துட்டு பட்டய கிளப்புவாங்க... உரிமையா எல்லோறையும் கூப்பிட்ட ரோகினி,ஹனிப்க்கு பாராட்டுக்கள்!என்னால Organize பன்ன முடியலனு உண்மையாவே வருந்துறேன்...

கடைசிப்பதிவோட கடைசி comment பாருங்க!,நம்ம Super Senior Ramesh அண்ணனோடது...இந்த தளத்த படிப்புக்கும் உபயோகிக்கிலாமேனு சொல்லிருந்தாங்க...சீக்கிரமே அதற்க்காண நடவடிக்கையை எடுப்போம்!ஏன்னா அடுத்த வருஷம் நாமளும் Project பன்னனும்,வேலைக்கும் போகனும்,இதுக்கு நம்ம Seniorஸொட contact இருந்தா நல்ல இருக்கும்..

சரி இப்போதைக்கு coolஆ leavஐ enjoy பன்னுங்க,ஊர் சுத்துங்க,Function attend பன்னுங்க.....

Wednesday, July 23, 2008

காத்திருந்த திருநாள்

ஒருவருடம் காத்திருந்த திருநாள்.......... ரத்த பந்தமில்லாமல் 3 வருடம் பழகிய அன்புசொந்தங்களை கடைசியாக ஒன்றாக ஒரே இடத்தில் காண ஒரு வாய்ப்பு......19/03/08 அன்று நடைபெற்ற "பட்டமளிப்பு விழாவின்" சில நினைவுத்துளிகள்..........
* வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள... உள்ளூர்வாசிகள் சிலர் Absent!
* College போன கொஞ்சநேரத்திலேயே H.O.D ட திட்டு வாங்கியாச்சு... "Dresscode Amount " 4 பேருக்கு ருபா கொடுத்துட்டு வழக்கம் போல ஒருத்தர் கையெழுத்து
போட..,பொரிஞ்சுட்டார் நம்ம H.O.D.
* "இன்னமும் ஒண்ணத்தான் அலையுரீங்களாப்பா?" நக்கலாக கேட்ட K.K.Madam ...உண்மையாகவே பசங்கட்ட நல்லா பேசினாங்க..
* நம்ம Arunesh sir வழக்கம் போல Dept வெளிய வந்து பசங்கட்ட லந்த கொடுத்துட்டு இருந்தார்.
* Dept உள்ள போனதும் நம்ம பசங்க தேடுனது நம்ம மகேஸ்வரி அக்காவ தான்!....அக்காவோ இப்போ Office Dutyla Busy ... உங்கள விட்டா யாருக்கா இருக்கா நம்ம H.O.D க்கு வடை வாங்கித்தர? Senior lab Programmer(?)ராஜேஸ்வரி எப்பவும் போல அன்னைக்கும் Busy(?!?)
* வழக்கம் போல Self Dept விட நம்ம பசங்க Student Strength காட்டி கலக்கிட்டாங்க....

* சொன்னா சொன்னபடி நிகழ்ச்சி ஆரம்பிக்கிற நம்ம Collegaa இது?
4.15க்கு ஆரம்பமான Convocation நிகழ்ச்சியில் பாராட்டதக்க விஷயம் மூன்று..
1) 'Physically Challenged' நபர்களுக்கு முதல்வர்,சிறப்பு விருந்தினர் உள்பட அனைவரும் கீழே வந்து பட்டம் அளித்தது..உண்மையிலே கலக்கிட்டாங்க! அதுவும் நம்ம 'Infosys' கைப்புள்ள பட்டம் வாங்கும் போது செம!

2)"அன்பு மாணவர்களே........" என அழுத்தமாக ஆரம்பிக்கும் நம்ம 'ஜெயவிலாஸ்'காரரை பேசவிடாமல் செய்தது....
3)நம்ம Canteen சாப்பாடு தான் இன்னைக்கும் என்று எதிர் பார்த்த சமயத்தில் உண்மையிலேயே நல்ல சாப்பாடு போட்டதுக்கு......(நம்ம itemல!)


* மிகவும் அழகாக, மகிழ்ச்சியாக கழிந்த நேரத்தில்,அனைவரையும் கவலைப்பட வைத்த ஒன்று.."Missing Of Our Prof.G.S". ஒன்னுமே தெரியாத நமக்கு கைப்பிடித்து,அடிப்படை மொழியாம் C மொழியை கற்றுக்கொடுத்த அன்பு ஆசான் திரு.ஜி.சுப்ரமணியன் அவர்கள் இல்லாத Dept........

* எது மாறினாலும் மாறாவிட்டாலும் என்றும் மாறாதவை.......

Canteen 1.50 வடை,சந்திரன் 'Special Costume' ,Xerox கடை கடலை,K.R.கவிதை,'உணர்ச்சி' கி.பிரபா,சின்னப்பாலம் அரட்டை,மினிபஸ் travel....
எல்லாம் சரிதான்....இனிமேல் இவை கிடைக்குமா? காத்திருக்கிறோம் அந்த இனிய தருனங்களுக்காக...

Saturday, May 24, 2008

திருமண வாழ்த்து!

46 பேர் கொண்ட எங்கள் Sorrowless Computer Groups-ல் 4வதாக 'திருமண மலர்கள்' பெரும் வகுப்பறை தோழி யசோதா!


23/05/08 அன்று தன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த தோழிக்கு,திருமண நாள் வாழ்த்துக்கள்!செல்லும் இடம் எங்கும் செல்வமும்,மகிழ்ச்சியும் பொங்கட்டும்..............!!


நாங்கள் படிக்கின்ற நேரத்திலேயே திருமணம் செய்து கொண்ட தோழி ராஜிக்கும், படிப்பு முடிந்த சமயத்தில் மணமான தோழி சுதாவிற்க்கும்,கடந்த ஜனவரியில் திருமணமான தோழி பிரதீபாவிற்க்கும் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்!(' its too late ' nu நீங்க சொல்றது கேக்குது!).

முடிந்த அளவு அனைத்து நண்பர்களையும் சுபநிகழ்ச்சிகளுக்கு அழையுங்கள்! நாம் சந்திக்க அதுவே சிறந்த வழி! நடைபெற்று முடிந்த நண்பன் கண்ணன் இல்லத் திருமண விழாவில் 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டார்கள்...இதற்க்கு இரண்டு முக்கிய காரணம் இருந்தன...ஒன்று நிகழ்ச்ச்சி நடைபெற்றது சாத்தூரில்,மற்றொன்று அனைவரையும் அழைத்திருந்தது!இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்!

தாங்கள் வரமுடியாவிட்டாலும் தங்கள் வாழ்த்துக்களையாவது தெரிவிப்பார்கள்!இங்கு நடக்கும் எதுவுமே தெரியமல் சிலர் இருக்கிறார்கள் என்பது சோகம்!முடிந்தவரையில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்காவது செய்தி அனுப்புங்கள்!

மூன்று வருடம் கழித்து நடத்த எதிர்பார்க்கப்படும் "GET TOGETHER"என்கிற நிகழ்ச்சிக்கு அதுவே மூலதனமாக இருக்கட்டும்!


"ஒரு கை ஓசை எழுப்பாது............!"


என்றும் அன்புடன்,
ஒருங்கினைப்பளர்,
Sorrowless Computer Groups,
Feel The Power Of Storm.