* Omni Busல ஆரம்பிச்சு கடைசில ஆட்குறைப்பு காரணமா Omni Vanஆக மாறியது சுற்றுலா வாகனம்!(College Busல போகாத வரை சந்தோஷம்!)
* "அழகென்ற சொல்லுக்கு முருகா...."னு Vanல பட்டுப் பாட...23ம் தேதி நள்ளிரவு 1மணிக்கு, கல்லூரி வினாயகர் கோவிலுக்கு தேங்காய் உடச்சு,கேட் Watchmanட வம்பிழுத்து,முக்குரோட்ல வேட்டு போட்டு ஆரம்பமாச்சு நம்ம Tour!(13 Girls+9 Boys+2Staffs)
* அதிகாலை 5 மணிக்கு கன்னியாகுமரிக்கு கொஞ்சம் முன்னாடி வேனை நிப்பாட்டி டீ! 5.30க்கு கன்னியாகுமரி! 6.10க்கு Sunrise!சுனாமி Emblem முன்னாடி எல்லாரும் சேர்ந்து Group Photo!
** பொண்ணுங்களோட முயற்சியால் திருட்பறப்பு Falls போக முடிவானது! உண்மையாவே செம ஆட்டம்!
காலையில சாப்பாடும் அங்க தான்! யாருமே எதிர் பார்க்காத விதமா எலியுமா பூனையுமா இருந்த நம்ம Class girls and Boys ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டது! பாதி பசங்களுக்கு சாப்பாடு Sponsor பிள்ளைங்கதான்!
* அப்புரம் கிளம்பினது திருவனந்தபுரத்துக்கு! 12.30க்கு Valley Beach.மதியம் சாப்பாடு நம்ம H.O.D சார் Sponsor! கூப்பிட்டும் பொண்ணுங்க சாப்பிட வரல! அப்புரம் 3 மணி போல Boat Riding!
* நல்லா அட்டம் போட்டுட்டு 4 மணிக்கு Covalam Beech .5 மணிக்கு வண்டிய எடுக்கனும்னு நம்ம H.O.D சார் சொல்ல பசங்க வந்தது 6 மணிக்கு! கடைசியா வந்து பாட்டு வாங்கினது நம்ம விஜயும்,கருப்பும்! இப்ப பாத்துகிட்டாலும் பசங்க இத சொல்லி கிண்டல் அடிப்போம்!
* அப்புரம் அமைதியா கிளம்பி,நாகர்கோவில் 'கொளரி சங்கர்' மெஸ்ல சாப்பிட்டு,H.O.D சார் கோவில்பட்டில இறங்கியதும் திரும்பவும் College வர ஆட்டம்!
கைல காசு கிடையாது,H.O.D சார்ட திட்டு,ஆனா எதபத்தியும் கவலைபடாம..உண்மையிலயே சேம Enjoyment!உண்மையில அனைவரும் பழகிக்க நல்ல வாய்ப்பா இருந்தது நம்ம Tour!
கல்லூரி முடிஞ்சு திசைக்கு ஒரு ஆளா போயாச்சு! இன்னைக்கு நினைச்சு பாத்தாலும் இனிக்கும் நினைவுகள் இது!எல்லாரும் Settle ஆன பிறகு திரும்பவும் இதே மாதிரி Tour போகனும்! நீங்க நினைச்சு நான் எழுதாம எதாவது விட்டு போயிருந்தா கண்டிப்பா உங்க Comments
பகுதில சொல்லுங்க!

3 comments:
Pasangelam s8 aduchatha yar soluva????
ena vaartha sollita nama pasangala paarthu..evlo nala pasanga nanga!
machan nama beach la enjoy pannathai innum deeeeep pa solli irrukkalam any have i proud of you da machan
Post a Comment