நீண்ட நாட்களுக்கு பிந்தைய பதிவு இது..
நாம் முதலாம் ஆண்டு படிக்கும் சமயத்தில் SENIOR-களோடு வெளிக்கல்லூரிகளில் நடைபெறும் IT TECH MEET போட்டிகளுக்கு செல்வதுண்டு.மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே திண்டுக்கல்லில் நடைபெற்ற (கல்லூரி பெயர் ஞாபகம் இல்லை!) முதல் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு நம் வகுப்பில் எனக்கும்,குமாருக்கும் கிடைத்தது!.கிளம்புவதற்க்கு முந்தைய நாள் நம் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி(ஒரு நாள் மட்டுமே!),அதிலும் பெரும்பாண்மையான நேரம் விளையாட்டு.அதிகாலையில் ஒரு சிறிய வேனில் பயணம்.காலை உணவு கிடையாது! அனைத்தும் A.R ராஜேஷ் Sir-இன் செலவு!போட்டியில் பங்கேற்க்க நுழைவுக்கட்டணம் செலுத்தினால் போதும் மதிய சாப்பாடு உண்டு!ஆதலால் காலையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளே..அதுவும் புதிதாய் வந்த எனக்கும் குமாருக்கும் மட்டுமே!மதியத்திற்க்கு மேலேதான் ஆட்டம் சூடு பிடிக்கும்.
முடிவுகள் அறிவிக்கப்படும்.அண்ணன்கள் அய்யாத்துரை,செந்தில்,ரமேஷ்,சந்தொஷ் ஆளுக்கொரு பரிசாக அள்ளுவார்கள்.இறுதியில் நம் கல்லூரி முதல் பரிசு(OVER ALL CHAMPIONSHIP) வெல்லும்.செல்லும் பொது அமைதியாக சென்ற பயணம் மிகுந்த குதுகலாகத்தோடு திரும்பும்.மறுநாள் காலையில் அனைவர் முன்னிலையிலும் பரிசு,அனைத்து பேராசிரியர்களிடமும் பாராட்டு என அமர்க்களப்படும் ஒரு வாரத்திற்க்கு..இதுவே ஒரு நல்ல தூண்டுதலாக அமைந்தது!இரண்டாம் ஆண்டில் சந்தொஷ் அண்ணன் தலைமை..மனிதர் தனி ஆளாக நின்று விலையாடுவார்! அதற்க்கு பலனாக SFR கல்லூரியில் முதல் பரிசு!மூன்றாம் ஆண்டில் சொல்லிக்கொள்ளும் விதமாக ஏதும் இல்லை..அந்த ஆண்டில் விருதுநகர் V.H.N.S.N கல்லூரியில் எனக்கு கிடைத்த ஒரே ஒரு இரண்டாம் பரிசே மிச்சம்...
இதற்க்கு பல காரணங்கள் இருந்தன..திறமையான பலர் இருந்தும் கூட்டமைப்பு,சரியான பயிர்ச்சி,வழி நடத்தல் இல்லாமை.....
நீண்ட காலத்திற்க்குப்பின் கடந்த மாதத்தில் அந்த சாதனைகளை மீண்டும் படத்துள்ளது தற்போதைய படை.. அழகாகவும்,ஆச்சர்யமாகவும் படையின் தலைமை நம் தோழன் (மற்றுமொறு) செந்தில் கடந்த வாரத்தில் அவனை நான் தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல் இது.கடந்த மாதத்தில் மட்டுமே இரண்டு கல்லூரிகளில் நடைபெற்றபோட்டிகளில் நம் கல்லூரி தான் முதல் பரிசு(OVER ALL CHAMPIONSHIP ) வென்றுள்ளது..விசாரித்ததில் இதற்க்கு பக்க துனையாக நம் K.K.மேடம்.சமீபத்தில் தந்தையை இழந்திருந்த நண்பன் அதிலிருந்து மீண்டு வரவும் இந்த போட்டிகள் உதவியிருக்கிறது.என் அனுபவத்தில் கண்டிப்பாக நம் கல்லூரி கவனம் கொள்ளவேண்டியவை இவை.
1) வெற்றி பெரும் சமயங்களில் பாராட்டுவதோடு நின்றுவிடாமல்,தொடர்ந்து பயிற்ச்சியும்,ஊக்கமும் தர வேண்டும் நம் கல்லூரி.
2) ஆறு வருடங்களுக்கு முன்னதாகவே மற்ற கல்லூரி அணிகள் இருபாலராக வந்து பங்கு பெறுவார்கள்.எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களை அதிகமாக கொண்ட நம் கல்லூரி,அன்று முதல் இன்று வரை ஆண்கள் மட்டுமே பங்கேற்க்க அனுப்புகிறது,திறமையான பெண்கள் இருந்தும்.
நண்பன் செந்திலுக்கு வாழ்த்துக்கள் :)...பின்னூட்டத்தில் நீங்களும் வாழ்த்து தெரிவியுங்கள்!
Monday, November 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
Hats off!!!!!!!!!!!!!!!!!!!!!!! Senthil
super da machan
senthil got a successive prizes on various colleges,that is SCG once again proof our name till now in our college sa well as our department throgh senthil.
Congrats!!! Keep Up Good Momentum.
Valthugal Senthil!
Valzthugal senthil!
Congrats machan...
I am so happy to see u for the things you have done well.Good initiative.Keep up
congrats senthil
Post a Comment