Saturday, March 23, 2013

கூட்டுப்பறவைகள் நாங்கள்

கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் தோழியின் நீண்ட நாள் கோரிக்கைக்கிணங்க இப்பதிவு!(ஒரு முக்கியமான நாளில்.. தெரியலைனா முழுசா படிங்க)
"இரைதேடும் பறவைகள்
 மீண்டும் கூடுவோம்
 கூண்டும்ப்ப்றவைகள் அல்ல
 கூட்டுப்பறவைகள் நாங்கள்" பிரிவு உபச்சார விழாவில் நான் சொன்ன கவிதை. கூடினோமா நாம்? சில புகைப்படங்களோடு திரும்பிப்பாரக்கலாம்


 30 பேர் கொண்ட மாணவ அணியில் இன்று பாதிக்கும் மேல் திருமணவாழ்க்கையில் ஐக்கியம் :).
 சுதா,ராஜி,ராஜகுரு,சுவர்ணலதா,மகேஸ்வரி,மாரீஸ்வரி,பிரதீபா,பிரபா,யசோதா,
நித்யா,சகிலா,காயத்ரி,விக்னகலா,கிருஷ்னபிரபா,கலைச்செல்வி என நீலும் வரிசையில் சமீபத்தில் இணைந்தது ரோகினி. விரைவில் இணையபோவது கலாராணி(15/ஜீன்/13). விரைவில் அனைவரும் இதில் இணைய வாழ்த்துக்கள்.

இதில் ராஜி,சுவர்ணலதா,சகிலா,பிரதீபா,பிரபா,யசோதா அனைவருக்கும் மழலைச்செல்வங்களும் உண்டு! மகிழ்ச்சி :)

இப்போ நம்ம வருத்தமில்லா கணினி அணி.. இன்னமும் அய்யாத்தல வழியில் வருத்தமில்லாமல்! விச்சு,செந்தில்,சந்திரன்,குமார்,கருப்பு,கோவிந்த்,வரது சென்னையில்,நான்,கனி,கண்ணன் பெங்களூரில் ஒதுங்க, விஜய் கோவையிலும்,கனகு,ஹனிப் மதுரையிலும் உள்ளனர்.மூவேந்திரன்,மணிமுத்து என்ன செய்றாங்கனு தெரியல. மைக்கேல் நம்முடன் இல்லை :(. 
















மேல உள்ள படம் கனகு ஊர்ல ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுல மச்சான் ஆடினத பார்க்க போனப்ப பக்கத்துல இருந்த மல்லிகை தோட்டத்துல எடுத்தது. என் மடியில் கிடக்கும் வரதுக்கும் இப்போ முகநூலில் இருக்கும் வரதுக்கும் 6 வித்தியாசம் முடிஞ்சா கண்டுபிடிங்க! இந்த காட்சிய புகைப்படமா கைது பண்ணிவச்ச எங்களால அந்த சந்தொஷத்த அப்படியே தக்க வைக்க முடியல :(. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? கிடைக்குமா அந்த நாள்?.


இத பாருங்க... யாராவது சுற்றுலானு காலைல போய்ட்டு மதியம் திரும்பியிருக்காங்களா?. நாங்க வந்திருக்கோமே :) குற்றாலம் .. முதல் வருடத்தில் நடந்த ஒரு விழாவில் பாதி காசை அமுக்கி போனது! குற்றலாம் போய் சாப்பிட காசு இல்ல.. திரும்பி வந்தாச்சு :) வாழ்க்கைல காசு வந்து என்ன பன்ன.. இந்த போட்டோ எடுக்குறப்ப யார் பாக்கெட்லயும் நயா பைசா கிடையாது.. ஆனா முகத்துல சந்தோஷம்? காசு மட்டும் வாழ்க்கை இல்லனு இன்னமும் இந்த போட்டோ உணர்த்தும்!


ஆங்... இது கல்லூரி வாழ்க்கையின் சந்தோஷம் உச்சகட்டத்துல இருந்தப்ப எடுத்துகிட்ட புகைப்படம். இந்த சுற்றுலாக்கு நம்மள கூட்டிட்டுப்போன தனபாலன் சார் நம்மளோட இப்ப இல்ல.. ஜி.எஸ் இப்போ கல்லூரில இல்ல. போன தைப்பொங்களோட எல்லோரும் மதுரைல பார்க்கனும்னு 3 மாசமா பேசி கடைசில மதுரைக்கு சந்திச்சுக்கிட்டது என்னோட சேர்த்து நாலு பேரு! ஆனா அப்ப இருந்த குமார்தான் இப்பவும் :) மனுஷன்யா அவன் !

இந்தப்படம் எடுத்து சரியா இன்னையோட சேர்த்து ஆறு வருசம் ஆச்சு!


நாளைக்கு பார்க்கலாம் மச்சினு சாமி கடைல விடைபெற்றது... கடைசி பஸ் வரும்வர பாலத்துல உட்கார்ந்து ஸைட் அடிச்சது.. மொத்தமா வகுப்புல இருந்து வெளிய போய் மானக்கேடா திட்டு வாங்கினது.. கிடைக்குமா?

4 comments:

SORROWLESS COMPUTER GROUPS said...

nice.... Analum engakita vanguna kasa thirupi kudukama fraudungala tour ah ponenga????

Unknown said...

Hi to all…thanks for remembering this till now.
Thanks to our friend Thims…
I am little bit far away from these updates of our friends. Anyway I am so happy and especially I wish to Mrs. Rohini.
Could anyone let me know who has posted the previous comment…?

ராகவன் பாண்டியன் said...

@ kani mama i guess that is Lakshmi.

Unknown said...

If she want back her money i'll pay dude....!!!!